படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21வது ஆண்டு
நினைவுதின அஞ்சலி நிகழ்வும், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படுகொலைக்கான நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டமும் நேற்று (31) மாலை இடம்பெற்றுள்ளது.
மலர்தூவி அஞ்சலி
இதன்போது மறைந்த ஊடகவியலாளர் நடேசனின் திருவுருவப் படத்துக்கு
தீபமேற்றி,மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ் அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து
சிறிநேசன் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 40 க்கும் மேற்பட்ட
ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
