Home விளையாட்டு அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கிற்கு தடைவிதித்த ஐ.சி.சி!

அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கிற்கு தடைவிதித்த ஐ.சி.சி!

0

சர்வதேச கிரிக்கெட் பேரவை எனப்படும் ஐ.சி.சியானது (International Cricket Council) அமெரிக்காவின் (United States) தேசிய கிரிக்கெட் லீக்கிற்கு தடை விதித்துள்ளது.

அணியின் ஆடும் லெவனில் விதிகளை மீறியதற்காக இவ்வாறு அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கை (என்.சி.எல்) ஐ.சி.சி தடை செய்துள்ளது.

குறைந்தபட்சம் 7 அமெரிக்க கிரிக்கெட்டைச் சேர்ந்த அல்லது அசோசியேட் வீரர்கள் எல்லா நேரங்களிலும் களத்தில் இருக்க வேண்டும் என்ற விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வீரர்கள்

ஆனால் லீக் போட்டியில் ஆறு வெளிநாட்டு வீரர்கள் களத்தில் விளையாடி உள்ளனர்.

இதன் காரணமாக எதிர்கால லீக்கை அனுமதிக்க மாட்டோம் என்று ஜெய் ஷா தலைமையிலான ஐ.சி.சி நிர்வாகக்குழு முடிவெடுத்துள்ளது.

இதேவேளை, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது சமி (Mohammed Shami), டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்ற முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் இந்திய டெஸ்ட் அணியில் இணைந்து அணியை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு பதிலாக 2025 செம்பியன்ஸ் கிண்ணம் மற்றும் 2025 ஐபிஎல் தொடருக்கு அவர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version