Home இலங்கை அரசியல் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும்: தேசிய தேர்தல் ஆணையகம் அறிவிப்பு

திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும்: தேசிய தேர்தல் ஆணையகம் அறிவிப்பு

0

2025, உள்ளூராட்சி தேர்தல்கள் மே 6 ஆம் திகதி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இலங்கையின் தேசிய தேர்தல் ஆணையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த ஆணையகத் தலைவர்
ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, தேர்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக
தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஏற்பாடுகள்

அதேநேரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளை மதிப்பதில் ஆணையகத்தின்
உறுதிப்பாட்டையும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும் ரத்நாயக்க
குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நிராகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு
மேல்முறையீட்டு நீதிமன்றம் தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது

அத்துடன் இன்று 53 மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version