Home இலங்கை சமூகம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலாவதியான இரசாயனங்கள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலாவதியான இரசாயனங்கள்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்

0

கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆய்வுக் கூடத்தில், சுமார் இரண்டு கோடிக்கு மேல்
(25 மில்லியன்) காலாவதியான,இரசாயனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளை பாதுகாக்கும் வைத்தியர்களின் சங்க கூட்டணியின் தலைவர் டாக்டர் சமல் சஞ்ஜீவ குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதன்படி காலாவதியான, காலாவதி திகதி அண்மித்த ஆய்வுக் கூடத்திற்குப் பயன்படுத்தப்படும் எதிர்வினையாற்றும் இரசாயனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் பல்லாயிரக்கணக்கான நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வைத்தியசாலை ஆய்வுக் கூடம்

கொழும்பில் இன்று(13) விசேட ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தேசிய வைத்தியசாலை ஆய்வுக் கூடத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் அரசினால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வின் படி,கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மருத்துவ விநியோகப் பிரிவின் ஒப்புதல் இல்லாமல் உள்ளூரில் வாங்கப்பட்ட இரசாயனங்களின் பெறுமதி ரூ. 2500 மில்லியனுக்கும் அதிகமாகும், இதில் கிட்டத்தட்ட 13 மில்லியன் பெறுமதியானவை காலாவதியாகிவிட்டது.

காலாவதியான  இரசாயனங்கள்

கடந்த ஆண்டு அக்டோபர் (2024) முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை கொள்வனவுகள் செய்யப்பட்டதாகக் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நிறுவனங்களிடமிருந்து காலாவதியான பொருட்களை வாங்கியது தொடர்பான ஆவணங்கள் தெளிவாக அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது.

கெஹெலிய ரம்புக்வெல்ல செய்ததை விட பத்து முதல் பதினைந்து மடங்கு பாரிய பரிவர்த்தனை கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆய்வுக் கூடத்திற்குள் மட்டும் செய்த கணக்காய்வில் சுமார் 5,000 இரசாயன உபகரணங்கள் இந்த வழியில் வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version