Home இலங்கை சமூகம் தேசிய பாதுகாப்பு தினம் தொடர்பான அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு தினம் தொடர்பான அறிவிப்பு

0

  சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களையும், காணாமல் போனவர்களையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’, நாளை (26.12.2025) காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை காலி, ரத்கமவில் உள்ள சுனாமி நினைவுச் சின்னத்தில் பொதுமக்களின் பங்கேற்புடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

35,000 பேரின் உயிரைப் காவு கொண்டு 5,000 க்கும் மேற்பட்டவர்களைக் காணாமலாக்கிய பயங்கர சுனாமி பேரழிவிற்கு நாளையுடன் 21 ஆண்டுகள் நிறைவடைகிறது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்தம்

 இந்தப் பேரழிவின் இருண்ட நினைவுகள் மற்றும் மரணித்து- காணாமல் போனவர்களின் நினைவாக, 2012 ஆம் ஆண்டு ‘தேசிய பாதுகாப்பு தினம்’ ஆண்டு தோறும் டிசம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு சுமத்ரா தீவுக்கு அருகில், இந்தியப் பெருங்கடலைத் தாக்கிய 9.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள், இலங்கை உட்பட பல நாடுகளில் பல உயிரிழப்புகளையும், பாரிய சொத்து சேதத்தையும் ஏற்படுத்தின.

அதன்படி, ரத்கம விகாரையின் பரலியே விமல தேரரின் வழிகாட்டுதலின் கீழ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மத அனுஷ்டானங்களின் பின்னர் நினைவு தீபம் ஏற்றப்பட்டு விழா ஆரம்பித்து வைத்து வைக்கப்படவுள்ளது. 

 

NO COMMENTS

Exit mobile version