வெசாக் வாரத்தை முன்னிட்டு நுவரெலியா நகர் முழுவதும் வெசாக் பந்தல்கள்,
தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பெளத்த விஹாரைகளில் மத
வழிபாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
“நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த
ஆண்டு தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
வெசாக் வாரம்
அதன்படி இன்று (10) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக்
வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நுவரெலியா பௌத்த
நிலைய விகாரையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
அத்துடன் வெசாக் தின வாரத்தை முன்னிட்டு நுவரெலியா நகரம் விழாக் கோலம்
பூண்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன.
விசேட தொடருந்து
இதில் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்குபற்றும் பெரஹராவும் நடைபெறவுள்ளது.
நுவரெலியாவில் நடைபெறும் தேசிய வெசாக் பண்டிகை முன்னிட்டு போக்குவரத்து நலன்
கருதி நேற்று (09) முதல் கொழும்பில் இருந்து பதுளை வரையில் விசேட தொடருந்து சேவை
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்தது.
எதிர்வரும் 13ஆம் திகதி வரை குறித்த விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
