Home இலங்கை அரசியல் வடக்கு வாழ் மக்களுக்கு ஜனாதிபதி அநுர அளித்த வாக்குறுதி

வடக்கு வாழ் மக்களுக்கு ஜனாதிபதி அநுர அளித்த வாக்குறுதி

0

போரின் போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களையும் மீண்டும் மக்களிடம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தேசிய மக்கள் சக்தி நடத்திய பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, போரின் போது அழிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் உதவும் என்றும், போரின் போது மூடப்பட்ட கிளிநொச்சி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுவிக்கப்படும் நிலங்கள்

அதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், “பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் நிலங்கள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாங்கள் அறிவோம்.

அந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் தளபதிகளுடன் நாங்கள் கலந்துரையாடினோம். மக்களுக்கு விடுவிக்கக்கூடிய ஒவ்வொரு அங்குல நிலத்தையும் திருப்பித் தர நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

அத்துடன், பாரம்பரியமாக பயிரிடப்பட்ட சில நிலங்கள் கூகுள் வரைபடத்தை பார்த்து வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இவை இந்தப் பகுதியில் பயிரிடப்பட்ட நிலங்கள், மக்களின் நிலங்கள், முறையான ஆய்வுக்குப் பிறகு அவற்றைத் திருப்பித் தர நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

வீடுகளை இழந்த மக்களுக்கு சலுகை

மேலும் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் கொழும்பு சாலை திறக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகைக்கு முன்னால் உள்ள சாலைகள் திறக்கப்பட்டுள்ளது.

  

கிளிநொச்சியில் வீதிகள் ஏன் மூடப்பட்டுள்ளன? மக்கள் பயணிக்க அந்த வீதிகள் அனைத்தையும் நாங்கள் திறந்து விடுகிறோம், யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே ஏராளமான வீதிகளை மீண்டும் திறந்துள்ளோம். இந்த நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.

போரினால் வீடுகளை இழந்த மக்களையும் நாங்கள் சந்தித்துள்ளோம், வடக்கில் வீடு கட்ட வசதி இல்லாதவர்கள் ஏராளமாக உள்ளனர், அவர்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டுவதற்கு எங்கள் அரசாங்கம் ஆதரவளிக்கிறது.” என்றார்.

https://www.youtube.com/embed/0WPtM_i9TB0

NO COMMENTS

Exit mobile version