Home இலங்கை சமூகம் நாடளாவிய ரீதியில் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ள பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ள பணிப்புறக்கணிப்பு

0

Courtesy: Sivaa Mayuri

எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் திகதி புதன்கிழமையன்று நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சங்கத்தின் உதவிச் செயலாளரும், ஊவா மாகாண இணைப்பாளருமான பாலித ராஜபக்சவுக்கு எதிராக முறையான முறைப்பாடு எதுவுமின்றி நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த விடயத்தினை அரச மருத்துவ அதிகாரிகளின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க அறிவித்துள்ளார்.

கறுப்புக்கொடி போராட்டம்

இதேவேளை, இன்று முதல் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு அனைத்து வைத்தியசாலைகளிலும் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலித ராஜபக்சவுக்கு எதிராக ஒழுங்கு விசாரணை எந்த முறையான முறைப்பாடும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

பதுளை வைத்தியசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் பற்றாக்குறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்களை அடுத்தே, இந்த விசாரணையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version