Home இலங்கை பொருளாதாரம் சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்த இயற்கை எரிவாயுவின் விலை

சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்த இயற்கை எரிவாயுவின் விலை

0

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இன்றைய தினம் (17) 2.12 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதேவேளை சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையும் இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மசகு எண்ணெய்

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.55 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.68 அமெரிக்க டொலராக நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களில் சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/natural-gas-price-fall-in-the-international-market-1723876023

NO COMMENTS

Exit mobile version