Home ஏனையவை வாழ்க்கைமுறை இயற்கையாக காடு போன்ற அடத்தியான முடி வளர்ச்சிக்கு சிறந்த எண்ணெய் !

இயற்கையாக காடு போன்ற அடத்தியான முடி வளர்ச்சிக்கு சிறந்த எண்ணெய் !

0

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே உள்ளது.

இந்தநிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  1. மல்லிகைப்பூ – 1 கப்
  2. தேங்காய் எண்ணெய் – 1 கப்

பயன்படுத்தும் முறை

  1. முதலில் மல்லிகைப்பூக்களை நன்றாக கழுவி, உலர வைக்கவும்.
  2. இப்போது ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.

  3. பின் இந்த எண்ணெய் நன்கு குளிர்ந்த பிறகு ஒரு ஜாடியில் மல்லிகைப்பூக்களை போட்டு அதில் எண்ணெயை ஊற்றவும்.

  4. இந்த கண்ணாடி ஜாடியை இரண்டு வாரம் வெயிலில் வைக்கவும்.
  5. குறிப்பாக நாள்தோறும் எடுத்து இதை நன்றாக கலந்து விடவேண்டும்.
  6. இரண்டு வாரத்திற்கு பிறகு இந்த எண்ணெயை வடிகட்டி தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.
  7. இந்த மல்லிகை பூ எண்ணெயை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்திவர கூந்தல் நன்கு அடர்த்தியாகவும் மற்றும் நீளமாகவும் வளரும்.    

Source: https://ibctamil.com/article/natural-oil-for-hair-regrowth-1746786037

NO COMMENTS

Exit mobile version