Home ஏனையவை வாழ்க்கைமுறை நோய்களுக்கு அரு மருந்தாகும் நாவல் பழம்

நோய்களுக்கு அரு மருந்தாகும் நாவல் பழம்

0

அரிய பல மருத்துவ குணங்களை கொண்ட நாவல் மரம் வீதி ஓரங்களில், குளக்கரை, ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. .

இந்தியா, இலங்கை, மியான்மர், மலேசியா ஆகிய நாடுகளிலும் பரவலாக காணப்படுகிறது. இலங்கையில் புத்த கோவில்களை சுற்றி நாவல் மரங்களை காணலாம். நாவல் பழங்கள் ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கிடைக்கின்றன.

மூளைக்கு பலம் தரும் 

துவர்ப்பு கலந்த இனிப்பாகவும், ருசியாகவும் இருக்கும். காய் பச்சையாகவும் பழம் கருநீல நிறத்திலும் இருக்கும். நாவல் பழம் மூளைக்கு பலம் தரும்  என்கிறார்கள், இயற்கை மருத்துவர்கள்.

இது கல்லீரல் நோயை குணமாக்கும். சிறுநீரகங்களை நன்கு இயங்க செய்து சிறுநீர் வெளியேறுவதை அதிகமாக்கும். பழத்தை உண்ண குடல் நன்கு இயங்கி ஜீரண சக்தி அதிகரிக்கும்.

கர்ப்பிணிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் 

பழத்தை கசாயமாக பிழிந்து குடித்து வந்தால் வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கம், நாள்பட்ட கழிச்சல் குணமாகும். பழச்சாறுடன் தேன் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

பழம் உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சியைத்தரும். இரத்தத்தை சுத்தம் செய்யும். பழத்தை அதிக அளவில் உண்டால் சளி, காய்ச்சல் மற்றும் தொண்டைக்கட்டுதல் ஏற்படலாம். நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிட்டால் தொண்டைக்கட்டு ஏற்படும் வாய்ப்பு குறைவு. நாவல்பழம் கர்ப்பிணிக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. நாவல் விதை பொடி நீரிழிவு பாதிப்பை குறைக்க உதவுகிறது என்பதால் இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version