Home இலங்கை குற்றம் யாழ். நெடுந்தீவு இளைஞர் படுகொலை விவகாரம் : பற்றைகளில் மறைந்திருந்த 3 சந்தேகநபர்கள் கைது

யாழ். நெடுந்தீவு இளைஞர் படுகொலை விவகாரம் : பற்றைகளில் மறைந்திருந்த 3 சந்தேகநபர்கள் கைது

0

யாழ். நெடுந்தீவில் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன்
தொடர்புபட்ட மூன்று சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (22.06.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற
படுகொலையுடன் நால்வர் தொடர்புபட்டனர் என்று செய்திகள் வெளிவந்திருந்தன.

மூன்று சந்தேகநபர்கள்

அவர்களில் ஒருவர் விபத்துக்குள்ளான நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் எஞ்சிய மூன்று சந்தேகநபர்களும் நெடுந்தீவுப் பகுதியில் உள்ள பற்றைகளில்
மறைந்திருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட மூவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/nedundivu-youth-massacre-3-suspects-arrested-1719100454

NO COMMENTS

Exit mobile version