Home இலங்கை குற்றம் தாயின் செயலால் ஆத்திரமடைந்த மாணவனின் விபரீத முடிவு

தாயின் செயலால் ஆத்திரமடைந்த மாணவனின் விபரீத முடிவு

0

மொனராகலையில் தாயின் செயலால் விரக்தியடைந்த மாணவன் ஒருவர்  உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானகல பகுதியில் குறித்த மாணவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

15 வயதான எதிரிமன்னகே கவீஷ லக்மால் என்ற மாணவனே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

விபரீத முடிவு

குறித்த மாணவன் அதே பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.

மாணவனின் தந்தை சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உரிய முறையில் முடி வெட்டிய பின்னர் மாணவனை பாடசாலைக்கு அனுப்புமாறு தாயாரிடம், பாடசாலை ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


பிரேத பரிசோதனை

அதற்கமைய, தாயார் தலைமுடியை வெட்டியதால் ஆத்திரமடைந்த மாணவன் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை வெல்லவாய ஆதார மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version