Home இலங்கை சமூகம் இந்திய – இலங்கை நாட்டு படகு கடற்றொழிலாளர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை

இந்திய – இலங்கை நாட்டு படகு கடற்றொழிலாளர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை

0

Courtesy: Sivaa Mayuri

இந்திய – இலங்கை நாட்டு படகு கடற்றொழிலாளர்களுக்கு இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என இராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு கடற்றொழில் குழுவினர் கோரியுள்ளனர்.

மதுரையில் இடம்பெறும் பாரம்பரிய கடற்றொழில் தொடர்பான தேசிய நிகழ்வின் போது, மத்திய கடற்றொழில்அமைச்சரிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இழுவைப்படகு பயன்பாடு

மத்திய மற்றும் மாநில அரசுகள் தலையிட்டு, ஜூலை 1ஆம் திகதி இலங்கையால் கைது செய்யப்பட்ட, தமது மாவட்டத்தைச் சேர்ந்த 25 நாட்டுப்படகு கடற்றொழிலாளர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

இலங்கை, தங்கள் கடற்பரப்பில் இழுவைப்படகு பயன்பாட்டை  எதிர்க்கிறது.

எனவே அது தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தையால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என நாட்டுப்படகு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே நாட்டுப்படகு கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்றொழிலாளர்களுடன் இணைந்து கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் மதுரையில் நடைபெறும் இதுபோன்ற தேசிய அளவிலான நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின்  கடற்றொழிலில் துறை அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் கலந்து கொள்ளாதது குறித்து, தேசிய பாரம்பரிய கடற்றொழிலில் கூட்டமைப்பைச் சேர்ந்த சேனாபதி நல்லதம்பி, தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version