Home இலங்கை நேபாளத்தில் பேரழிவுகரமான வெள்ளம்! கவலை வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கம்

நேபாளத்தில் பேரழிவுகரமான வெள்ளம்! கவலை வெளியிட்டுள்ள இலங்கை அரசாங்கம்

0

நேபாளத்தின் ரசுவா மாவட்டம் உட்பட பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கு குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இது தொடர்பான பதிவை தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ளார்.

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள்

இந்த சவாலான காலகட்டத்தில் நேபாள அரசாங்கத்துடனும் அந்நாட்டு மக்களுடனும் இலங்கை முழுமையாக உறுதுணையாக நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், குறிப்பாக இந்த கடினமான சூழலை எதிர்கொள்ளும் குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு தனது ஆறுதல்களைத் தெரிவித்துள்ள அவர், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நேபாள அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் முயற்சிகளையும் எடுத்துரைத்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/nepal-floods-sri-lanka-concerned-1787764139

NO COMMENTS

Exit mobile version