Home உலகம் பைடனுடன் கைப்பேசி உரையாடலில் ஈடுபட்ட நெதன்யாகு

பைடனுடன் கைப்பேசி உரையாடலில் ஈடுபட்ட நெதன்யாகு

0

அமெரிக்க (United States) ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் (Joe Biden) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் (Benjamin Netanyahu) இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

குறித்த தொலைபேசி உரையாடல் நேற்றைய தினம் (12.01.2025) இடம் பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரம் பலவீனமடைதல்

இதன்போது, பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பு, காசா பகுதியில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து ஜோ பைடன் கலந்துரையாடியுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிரியாவில் அசாத் ஆட்சியின் வீழ்ச்சி மற்றும் ஈரானின் அதிகாரம் பலவீனமடைதல் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவிற்கும், பாதுகாப்பிற்கும், நெதன்யாகு நன்றிகளை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version