Home இலங்கை பொருளாதாரம் துறைமுக முதலீடுகளில் ஈடுபடவுள்ள நெதர்லாந்து

துறைமுக முதலீடுகளில் ஈடுபடவுள்ள நெதர்லாந்து

0

இலங்கையில் துறைமுகம் தொடர்பான முதலீடுகளில் ஈடுபட நெதர்லாந்து (Netherland) அரசாங்கம்
தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் நெதர்லாந்து தூதர் எச்.இ. போனி
ஹோர்பாச் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த விடயம்
வெளிப்படுத்தப்பட்டது.

பரஸ்பர உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இலங்கையில் சுற்றுலா, துறைமுக
நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு டச்சு அரசாங்கம் வழங்கக்கூடிய சாத்தியமான
ஆதரவு குறித்து இதன் போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

Source: https://tamilwin.com/article/netherlands-to-invest-in-ports-1740711566

NO COMMENTS

Exit mobile version