அநுர அரசுக்கு எதிராக நுகேகொடையில் நாளை நடைபெறவுள்ள பேரணியில் தான் பங்கேற்க
மாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான
நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பேரணியில் பங்கேற்பீர்களா, இல்லையா எனக் கட்சியின் செயலாளர் என்னைக்
கேட்டார்.
ஒருபோதும் அரசியல் பயணம் கிடையாது
இதன்போது பங்கேற்கப்போவதில்லை எனத் தெளிவாகக் குறிப்பிட்டேன் என்று நவீன் திஸாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சக்களுடன் இனி ஒருபோதும் அரசியல் பயணம் கிடையாது என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
