Home இலங்கை சமூகம் விரிவாக்கப்படும் GOV PAY அமைப்பு: மேலும் இலகுவாகும் மக்களுக்கான சேவைகள்

விரிவாக்கப்படும் GOV PAY அமைப்பு: மேலும் இலகுவாகும் மக்களுக்கான சேவைகள்

0

புதிய 50 அரசு நிறுவனங்களை GOV PAY அமைப்புடன் இணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால தெரிவித்துள்ளார்.

அதன்படி, விரிவாக்கப்பட்ட அமைப்பு அடுத்த மாதத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும் என்றும், இணைக்கப்பட்ட நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கையை 100 ஆக அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் பொருளாதாரம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவுகளைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் டிஜிட்டல் பொருளாதார மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்வரும் மாதம் முழுவதும் தொடர்ச்சியான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version