Home இலங்கை சமூகம் விரைவில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்

விரைவில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்

0

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என்று அது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவிற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன தலைமையில் நீதி அமைச்சில் அண்மையில் கூடியது. 

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் 

இதன்போது சட்டமூலத்தில் கொண்டு வரப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நெரின் புல்லே, சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் அசங்க கரவிட்ட, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் பியமுந்தி பீரிஸ் மற்றும் உயர் அதிகாரிகள் குழு இந்த கலந்துரையாடலில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு குழு இதுவரை 14 முறை கூடியுள்ளதுடன், அதன் அடுத்த கலந்துரையாடல் நாளை (22) இடம்பெறவுள்ளது. 

சட்டமூல வரைவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள், சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகங்களின் கருத்துக்களைப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்

NO COMMENTS

Exit mobile version