Home இலங்கை சமூகம் அஸ்வெசும இரண்டாம் கட்டம் – மக்களுக்கு வெளியான அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்டம் – மக்களுக்கு வெளியான அறிவிப்பு

0

அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வதற்கான காலத்தை நீட்டிக்க தீர்மாணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வெசும 

அதன்படி, இந்த மாதம் 31 ஆம் திகதி வரை அந்தக் காலத்தை நீட்டிக்க சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுவரை அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக 39,707 மேன்முறையீடுகளும் 3,183 ஆட்சேபனைகளும் பெறப்பட்டுள்ளன.

குறித்த மேன்முறையீடுகள் பிரதேச செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழுவினூடாக மீளாய்வு செய்யப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version