இன்று (01) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கையின்படி, 12 நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதலாம் திகதி பேருந்துக் கட்டணத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.
பேருந்து கட்டணம்
இதன்படி இவ்வருட கட்டண திருத்தத்தில் பேருந்து கட்டணம் 5.07 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதுடன் குறைந்தபட்ச பேருந்து கட்டணமான 30 ரூபாய் கட்டணம் 28 ரூபாய் வரை இரண்டு ரூபாவால் குறைக்கப்படவுள்ளளது.
அதிவேக வீதிகள் உட்பட அனைத்து பேருந்துகளுக்கான புதிய கட்டணத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.