இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் (Sri Lanka’s Civil Aviation Authority) புதிய
தலைவராக சுனில் ஜயரத்ன (sunil jayaratne) நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (04) தனது கடமைகளை கட்டுநாயக்கவில் உள்ள தலைமையகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
சுனில் ஜயரத்ன இலங்கை சுங்கத் திணைக்களத்தில் 37 வருடங்கள் பணியாற்றியதோடு அதன் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.
புதிய தலைவர்
சுமார் மூன்றரை ஆண்டுகள் சுங்கத்துறை செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கென்பெரா பல்கலைக்கழகத்தின் சுங்க சட்டம் மற்றும் முகாமைத்துவ முதுகலைப் பட்டதாரியும் ஆவார்.
இந்த நிகழ்வில் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய மற்றும் அதிகார சபையின் அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டனர்.