Home இலங்கை சமூகம் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தர் நியமனம்

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தர் நியமனம்

0

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தராக கல்லேல் சுமனசிறி தேரர்( Dr. Gallelle Sumanasiri Thera) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவினால் இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, அதற்கான நியமனக் கடிதம் தேரரிடம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின்(Rajarata University) வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி கல்லேல் சுமனசிறி தேரர், ஹரங்கஹவ, மொலகொட ரஜமஹா விகாரையின் தலைமை பீடத்தில் இருந்துள்ளார்.

கல்லேல் சுமனசிறி தேரர்

அத்துடன், அகில இலங்கை சாசனரக்ஷக பல மண்டலத்தின் கண்டி மாவட்ட செயலாளர் பதவியையும் வகித்துள்ளார்.

மேலும், அவர் ஹோமாகம பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version