Home இலங்கை சமூகம் ஊவா மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் நியமனம்

ஊவா மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் நியமனம்

0

ஊவா மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக பி.ஏ.ஜி. பெர்னாண்டோ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (28) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான பி.ஏ.ஜி. பெர்னாண்டோ, முன்னதாக மேல் மாகாண கல்வி, கலாச்சார மற்றும் கலை விவகாரங்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் , தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக பணியாற்றியிருந்தார்.

பிரதம செயலாளர் நியமனம்

இந்நிலையில் இன்று தொடக்கம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊவா மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக கடமையாற்றியிருந்த எம்.எல். கம்மன்பில, கோட்டாபய அரசாங்கத்தின் பிரபலமான மனிதக் கழிவு உரம் விவகாரம் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version