Home இலங்கை சமூகம் 5 நாட்களுக்கு மேல் விடுமுறை எடுக்கும் அரச ஊழியர்களுக்கு சிக்கல்: புதிய சுற்றறிக்கை வெளியானது

5 நாட்களுக்கு மேல் விடுமுறை எடுக்கும் அரச ஊழியர்களுக்கு சிக்கல்: புதிய சுற்றறிக்கை வெளியானது

0

அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பொது சேவைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் அறிவிக்காமல் சேவைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் சில சந்தர்ப்பங்களில் சேவையில் இருந்து விலகுவதாக அறிவித்தல் வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆவது கண்காணிக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் பொதுச்சேவை ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

பதவி உயர்வு பெறும் அதிகாரிகள்

பொதுச் சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் பிரிவு 216 இன் படி இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பொது சேவை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், எதிர்காலத்தில் பதவி உயர்வு பெறும் அதிகாரிகள், நியமனக் கடிதம் கிடைத்த நாளிலிருந்து 22  நாட்களுக்குள் புதிய பதவியை ஏற்க வேண்டும் என்று பொதுச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு மாதத்திற்குள் கடமைக்கு சமூகமளிக்காத உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள் இரத்து செய்யப்பட்டதாக கருதப்பட வேண்டுமென்றும் பொதுச்சேவை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version