தொடருந்து திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள ரவீந்திர பத்மப்பிரிய, நேற்றையதினம்(13) தனது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான இவர், முன்னதாக திட்டமிடல் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பதவியில் செயற்பட்டிருந்தார்.
தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளராக இருந்த தம்மிக்க ஜயசுந்தர, அண்மையில் அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து ரவீந்திர பத்மப்பிரிய அப்பதவிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருத்தமான பதவி
பதவி நீக்கம் செய்யப்பட்ட தம்மிக்க ஜயசுந்தரவுக்கு, இலங்கை பொறியியல் சேவையின் பொருத்தமான பதவியொன்று வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
