Home இலங்கை சமூகம் யாழ்.இராணுவ முகாம் ஒன்றிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு அதிரடி உத்தரவு

யாழ்.இராணுவ முகாம் ஒன்றிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு அதிரடி உத்தரவு

0

யாழ். (Jaffna) வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலைமையகமத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றிலிருந்து (18) பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

வெளியேற்றப்பட்ட இராணுவத்தினர்

குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன் நில அளவை செய்வதற்கும் பல தடவைகள் முயற்சிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அநுர அரசாங்கம் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் இந்த உத்தரவு இராணுவ தலைமையகத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ இராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் சிலருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர்களுக்கு மூளைக் காய்ச்சல் ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version