Home இலங்கை சமூகம் குவைட்டில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

குவைட்டில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

0

குவைட்டில் (kuwait)  பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தங்களது கைவிரல் அடையாளத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை அந்தநாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (Sri Lanka Bureau of Foreign Employment ) தெரிவித்துள்ளது.

இதற்கான கால அவகாசம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைய இருந்தது.

விசேட அறிவிப்பு

இந்நிலையில் மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குவைட்டில் பணிபுரியும் அனைத்து இலங்கை பணியாளர்களும் உரிய இடங்களில் தங்களின் கைவிரல் அடையாளத்தை வழங்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரியுள்ளது.

Source: https://ibctamil.com/article/new-guidelines-for-workers-in-kuwait-1732520698

NO COMMENTS

Exit mobile version