Home இலங்கை சமூகம் பௌத்த பிக்குணிகளுக்கு புதிய அடையாள அட்டை

பௌத்த பிக்குணிகளுக்கு புதிய அடையாள அட்டை

0

பௌத்த பிக்குணிகளுக்கு அவர்கள் பிக்குணிகள் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் புதிய அடையாள அட்டை வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுவரை காலமும் பௌத்த பிக்குணிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் பிக்குணி என்பதற்குப் பதில் நன்னெறி பக்தை (சில்மாதா) என்ற பதமே பயன்படுத்தப்பட்டிருந்தது.

தனியான அடையாள அட்டை

எனினும் இனிவரும் நாட்களில்  சில்மாதா என்பதற்குப் பதில் தெளிவாக பிக்குணி என்றே குறிப்பிட்டு அடையாள அட்டை வழங்குமாறு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் எதிர்வரும் காலங்களில் பௌத்த பிக்குணிகளுக்குத் தனியான அடையாள அட்டை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version