ஹட்டன் – நோர்டன்பிரிட்ஜ் பிரதான சாலையில் காசில்ரீ பகுதியில் கட்டப்பட்ட
பாலம் இடிந்து விழுந்ததால் தடைபட்டிருந்த போக்குவரத்து நாளை (13)
முதல் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார
சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பாலத்தில் உள்ள இணைப்புகளும் ஏற்கனவே பழுதாகி இருந்ததுடன் சமீபத்தில் ஏற்பட்ட
பேரிடர் காரணமாக காரணமாக கடுமையாக சேதம் அடைந்து கடந்த மாதம் (29) அன்று பாலம்
இடிந்து விழுந்தது.
இதனால் அன்று முதல் குறித்த வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக
தடைபட்டது.
போக்குவரத்துக்கு அனுமதி
அதன் பின்னர் பல்லேகெலே இலங்கை இராணுவத்தின் 31ஆவது இராணுவ பொறியியல்
படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பொறியியல்
பிரிவுடன் இணைந்து 15 மீட்டர் நீளமுள்ள புதிய இரும்பு பாலத்தை பொருத்தும்
பணிகள் முழுவதும் முடிவடைந்து உள்ளது.
எனவே பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்து நாளை (13) முதல்
போக்குவரத்துக்கு திறக்கப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபையால்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
