Home இலங்கை அரசியல் கட்சித்தாவல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! சஜித் சூளுரை

கட்சித்தாவல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! சஜித் சூளுரை

0

மக்கள் அபிப்பிராயத்துடன் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டு ஒவ்வொரு பக்கமும் தாவிக் கொண்டிருக்கின்ற கட்சித்ததாவல் அரசியல் முறையை இல்லாது செய்வதற்கான புதிய சட்டத்தை கொண்டு வருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

அம்பாறை (Ampara) பொத்துவிலில் (Pottuvil) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு நேற்றையதினம் (27) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிலருக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தாய் தந்தையர் மற்றும் அவர்களின் பிறப்பு என்பன மறந்து போய் விடுகின்றது.

கட்சித்ததாவல்கள் 

சிலர் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டு நல்லடக்கமா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது கோட்டாபய ராஜபக்சவுக்கு (Gotabaya Rajapaksa )கையை உயர்த்தினார்கள்.

முஸ்லிம் மக்களுடைய கலாச்சார மற்றும் மார்க்க உரிமையை பாதுகாப்பதற்காக தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியினர் செயற்பட்டுள்ளனர்.

மதுபான சாலை அனுமதி பத்திரங்களுக்காகவும், வைன் ஸ்டோர்ஸ்களுக்காகவும் மக்கள் கொடுத்த வரங்களை விற்பனை செய்திருக்கின்றார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒரு பக்கம் இருந்து இன்னொரு பக்கம் தாவுகின்ற கட்சித்ததாவல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

அரசியலுக்கு முற்றுப்புள்ளி

தற்பொழுது காணப்படுகின்ற சட்டங்களை மேலும் வலுப்படுத்தி தமக்கான ஆதாயத்திற்காக, கட்சி மாறுகின்ற அரசியலை நிறுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

எமது நாடு சுதந்திர நாடு என்றாலும் மக்களுக்கான பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போயிருக்கின்றது.

எமது நாடு இன மத ரீதியாக பிரிந்து காணப்பட்டாலும் நாட்டு மக்கள் இன, மத, வகுப்பு வாதங்கள் இன்றி 21 ஆம் திகதியாகும் போது ஒன்றாக இணைந்து, தேசிய இனக்கத்தோடும், நல்லிணக்கத்தோடும், நட்புறவோடும் ஒன்றுபட்ட தாய் நாட்டைக் கட்டி எழுப்புவார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: https://ibctamil.com/article/new-law-to-stop-political-party-switching-1724850440

NO COMMENTS

Exit mobile version