Home இலங்கை சமூகம் புதிய மதுவரி உரிமம் வழங்குவதை தடை செய்யக்கோரி உயர்நீதிமன்றில் மனு

புதிய மதுவரி உரிமம் வழங்குவதை தடை செய்யக்கோரி உயர்நீதிமன்றில் மனு

0

Courtesy: Sivaa Mayuri

மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் விதிகளை மீறி எந்தவொரு விண்ணப்பதாரருக்கும், மதுவரித்திணைக்கள அதிகாரிகளுக்கும் புதிய மதுவரி உரிமம் வழங்குவதைத் தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் (Supreme Court Sri Lanka) அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுவரி ஆணையாளர் நாயகம், திணைக்கள அதிகாரிகள், நிதி அமைச்சின் செயலாளர், நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், நிதியமைச்சு மற்றும் பலருக்கு எதிராக இலங்கை மதுபான உரிமதாரர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இருவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: மைத்திரி இரண்டாவது தடவையாக வாக்குமூலம்

அடிப்படை உரிமைகள் மனு

மனுதாரர்களான தனஞ்சய குணசேகர மற்றும் நிசாந்த லக்ச்மன் ஆகியோர், தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான முறையில் புதிய மதுபான உரிமங்களை வழங்குவது அரசியல் உள்நோக்கம், அரசியல் அழுத்தம் அல்லது முற்றிலும் பொருத்தமற்ற காரணிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று தமது மனுவில் கூறியுள்ளனர்.

எந்தவொரு பகுத்தறிவு, புறநிலை, நியாயமான மற்றும் வெளிப்படையான வழிமுறைகளைப் பின்பற்றாமல் பல தனியார் நிறுவனங்களுக்கு பல மதுபான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் புதிய சில்லறை மதுவரி உரிமங்களை வழங்கும்போது விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பகுத்தறிவு மற்றும் நியாயமான நோக்கங்கள் அல்லது விஞ்ஞான அளவுகோல்களை உடனடியாக உருவாக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர். 

272 பயணிகளுடன் லண்டன் நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

நடு வீதியில் திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version