Home இலங்கை சமூகம் கல்முனையில் வைத்தியசாலைகளுக்கு கையளிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள்

கல்முனையில் வைத்தியசாலைகளுக்கு கையளிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள்

0

கல்முனையில் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு  இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது கல்முனை (Kalmunai) பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இன்று (04) நடைபெற்றுள்ளது.

அந்தவகையில், பி.எஸ்.எஸ்.பி (PSSP) திட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள ஆதார வைத்தியசாலைகள் உள்ளிட்ட அவசர தேவைகள் உள்ள பிரதேச வைத்தியசாலைகள் சிலவற்றுக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வைத்தியசாலை  உபகரணங்கள்

இதன்போது சம்மாந்துறை (Sammanthurai), நிந்தவூர் (Nitavur), திருக்கோவில் ஆகிய ஆதார வைத்தியசாலைகள் மற்றும் பனங்காடு ஒலுவில், அன்னமலை, இறக்காமம் ஆகிய பிரதேச வைத்தியசாலைகளுக்கும் குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிராந்திய பிரிவு தலைவர்கள், சம்மாந்துறை, நிந்தவூர், திருக்கோவில் ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள், பிரதேச வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version