Home இலங்கை சமூகம் புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

0

 இலங்கையிலிருந்து(sri lanka) புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழு் நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(anura kumara  dissanayake)டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு அமைய இந்த திட்டம் இன்று (06) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தால் (vijitha herath)ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முன்னோடித் திட்டம்

இதன்படி, 07 தூதரகங்களுக்கு இந்த முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், ஜப்பான், கட்டார், குவைத் தூதரகங்கள், மிலானோ, டொறொன்டோ, மெல்பேர்ன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளின் துணைத் தூதரகங்கள் ஊடாக அந்த நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மேற்படி ஆவணங்களை தாமதமின்றி பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் அனைத்து தூதரகங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.   

 

NO COMMENTS

Exit mobile version