Home இலங்கை சமூகம் யாழ்.சர்வதேச விமான நிலையத்துக்கான புதிய பயணிகள் முனைய கட்டடத்திற்கான பணிகள் ஆரம்பம்

யாழ்.சர்வதேச விமான நிலையத்துக்கான புதிய பயணிகள் முனைய கட்டடத்திற்கான பணிகள் ஆரம்பம்

0

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான புதிய பயணிகள் முனைய கட்டடம்
அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று(2025.12.15) இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தலைவர் சமன் அமரசிங்க, விமான நிலைய இணை முகாமைத்துவ
தலைவர் சஞ்சீவ அமரபதி, ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடத்திற்கான
அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

புதிய பயணிகள்

புதிய முனையக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் இரண்டு கட்டங்களாக
மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கட்டம் 02 க்கான வேலைகள் ஜனவரி 2026 இல் திட்டமிடப்பட்டுள்ளது.

முனையத் திட்டத்தின் இரண்டு கட்டங்களுக்கும் எதிர்பார்க்கப்படும் மொத்த
முதலீடு 700 மில்லியன் என கணிப்பிடப்பட்டுள்ளது.

முன்னர் பலாலி விமான நிலையம் என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான
நிலையம், பிரிட்டிஷ் ஆயுதப்படைகளால் பலாலியில் 359 ஏக்கர் நிலத்தில்
நிறுவப்பட்டது.

இதேவேளை இந்தியாவிற்கான அதன் முதல் விமானம் 1947 டிசம்பர் 10 திகதி
இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version