Home இலங்கை சமூகம் கடவுச்சீட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கடவுச்சீட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

0

26,000இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் புதிய கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடவுச்சீட்டுகளை தயாரிக்கும் போதும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை பெறும்போதும் இடைத்தரகர்களின் உதவியை நாட வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இந்த விண்ணப்பங்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களால் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகப் பெறப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

கடவுச்சீட்டுகள் காலாவதி

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சில தனிநபர்கள் தங்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் காலாவதியாகிவிட்டதால் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

இதனால் வெளிநாடுகளில் படிக்கும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த பிரச்சினைக்கு உடனடித் தீர்வை வழங்குவதற்காக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையுடன் கலந்துரையாடலும் நடத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

இருப்பினும், இந்த மாத இறுதிக்குள் இந்த பிரச்சினையை முடிந்தவரை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தற்போதைய அரசாங்கம் இந்த நெருக்கடியை உருவாக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version