நாட்டில் அடுத்த சில நாட்களில் முச்சக்கரவண்டிகளுக்கான புதிய தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.
தொழில்சார் முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் (Colombo) நேற்று (18) நடைபெற்ற சந்திப்பில் முன்னாள் நிதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”இன்று நாடு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதால், தொழில்முறை ஓட்டுநர்களாகிய நீங்கள் பல சங்கங்களை இணைத்து புதிய போக்குவரத்து சங்கத்தை உருவாக்கியுள்ளீர்கள்.
வரிசை யுகம்
நாம் ஒரு பொருளாதாரக் கொள்கையின் கீழ் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது அவசியம். அன்று இந்த நாட்டில் வரிசை யுகம் காணப்பட்டது. மேலும், 08 இலட்சத்திற்கும் அதிகமானோர் முச்சக்கரவண்டித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மை காரணமாக கடந்த காலங்களில் பாரிய நெருக்கடிகளை நீங்கள் எதிர்கொண்டீர்கள். முச்சக்கர வண்டிகள் தொழில் ரீதியாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மை காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீண்டும் நம் நாட்டிற்கு வருகை தருகின்றனர். நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் பெரும் சேவை செய்து வருகின்றனர்.“ என தெரிவித்துள்ளார்.