Home ஏனையவை வாழ்க்கைமுறை வைத்தியசாலை முறைமை தொடர்பில் அரசாங்கம் விசேட நடவடிக்கை

வைத்தியசாலை முறைமை தொடர்பில் அரசாங்கம் விசேட நடவடிக்கை

0

ஒருவர் வசிக்கும் பகுதியிலிருந்து இரண்டரை கிலோமீட்டருக்குள் நோய்களைப் பரிசோதிக்க ஆரம்ப சுகாதாரப் பிரிவை நிறுவுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஆரம்ப சுகாதார மேம்பாட்டுக்கான முன்னோடித் திட்டம் இந்த ஆண்டு இரண்டு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (23.01.2024) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதை கூறியுள்ளார்.

வெளிநோயாளர் பிரிவு

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், 

“மருத்துவமனை அமைப்பில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வருவது மிகவும் கடுமையான பிரச்சினையாக உள்ளது.

மேலும், ஒருவர் வசிக்கும் பகுதியிலிருந்து இரண்டரை கிலோமீட்டருக்குள் மக்களின் நோய்களைப் பரிசோதிக்க ஒரு ஆரம்ப சுகாதாரப் பிரிவை நிறுவுவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

அதற்குத் தேவையான மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது ஒரு சவாலாக இருந்தாலும், அது செயல்படுத்தப்படும்.

இதன்படி ஆரம்ப சுகாதார சேவையை நெறிப்படுத்துவதில் சமூக மருத்துவ நிபுணர்கள் மற்றும் குடும்ப மருத்துவ நிபுணர்களை உருவாக்குவது முக்கியம்’’ என சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version