Home இலங்கை பொருளாதாரம் புழக்கத்திற்கு விடப்படும் 2000ரூபா நாணயத்தாள்

புழக்கத்திற்கு விடப்படும் 2000ரூபா நாணயத்தாள்

0

சமீபத்தில் வெளியிடப்பட்ட ரூ.2000 நினைவு நாணயத்தாள் படிப்படியாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2025 ஆகஸ்ட் 29 அன்று ரூ. 2000 நினைவு நாணயத் தாளை வெளியிட்டது.

நாணயத்தாள் அனைத்து வங்கிகளிலும் 

இந்நிலையில், புதிய நாணயத்தாளை சுமூகமாக ஏற்றுக்கொள்வதற்கும் விநியோகிப்பதற்கும் வசதியாக, உரிமம் பெற்ற வணிக வங்கிகள் தங்கள் பணத்தை கையாளும் இயந்திரங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.

செயல்முறையின் வேகத்திற்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் படிப்படியாக உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் புழக்கத்தில் விடப்படும்.

அளவுத்திருத்த செயல்முறை முடிந்ததும், புதிய நாணயத்தாள் அனைத்து வங்கிகளிலும் தடையின்றி கிடைக்கப்பெறும் என்று மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version