புதிய சீரியல்
சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அய்யனார் துணை, மகாநதி என பல வெற்றி சீரியல்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில், விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ’கனா கண்டேனடி’ என்கிற புத்தம் புதிய சீரியல் வரவிருக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று: ரவி Bag-ல் நீத்துவின் உடை.. கடும் கோபத்தில் ஸ்ருதி..
ஹீரோ, ஹீரோயின்
இந்த சீரியலில் இளம் நடிகை சைத்ரா ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இவர் கன்னடத்தில் ஸ்டார் மா டிவியில் ஒளிபரப்பாகி வரும் பானுமதி சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர்.
மேலும், ஹீரோவாக Youtube பிரபலம் ஜோய்சன் நடிக்கிறார். இதன்மூலம் அவர் சின்னத்திரையில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த சீரியலின் அறிவிப்பு வெளிவரவுள்ளது.
