Home சினிமா சிந்து பைரவி, தனம் சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் களமிறங்கும் புதிய தொடர்… புரொமோ?

சிந்து பைரவி, தனம் சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் களமிறங்கும் புதிய தொடர்… புரொமோ?

0

சீரியல்களுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சிக்கு நிகராக வளர்ந்து வருகிறது விஜய் டிவி.

டிஆர்பியில் ஒவ்வொரு வாரமும் சன் டிவிக்கு டப் கொடுக்கும் விஜய் டிவியில் நிறைய தொடர்கள் களமிறங்கி வருகிறது. 

சிந்து பைரவி சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த தொடர் ஒரு பெரிய பிரச்சனையோடு கதாநாயகர்களின் திருமணம் நடந்து முடிந்தது, அதன்பின்பு கதைக்களம் மிகவும் விறுவிறுப்பான செல்கிறது என்றே கூறலாம்.

இன்னொரு தொடர் தனம், கதாநாயகன்-நாயகி பிரச்சனைகளுக்கு பிறகு திருமணம் முடிந்தது, அதன்பிறகே ஏகப்பட்ட போராட்டங்கள் கதையில் இருப்பதாக நன்றாக தெரிகிறது.

புரொமோ

தற்போது இந்த தொடர்கள் மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்போது இன்னொரு புதிய சீரியலின் புரொமோ குறித்த தகவல் வந்துள்ளது.

அதாவது மோதலும் காதலும் சீரியல் புகழ் சமீர் மற்றும் முத்தழகு தொடர் புகழ் ஷோபனா இருவரும் ஜோடியாக ஒரு புதிய தொடர் நடிக்கிறார்கள்.

பூங்காற்று திரும்புமா என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் புரொமோ அந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version