தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையை விட சிறந்த அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கான டெண்டர்கள் திறக்கப்பட்டு, தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையில் பார் குறியீடு நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியாவில் ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள 340 இடங்கள்
இதேவேளை, தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள 340 இடங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு நிதிப் பிரச்சினைகள் இருப்பதாகவும், ஆனால் மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக நாடு முழுவதும் பல அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
சுதந்திரக்கட்சிக்குள் நிலவும் கடும் மோதல்: கொழும்பில் அவசரமாக ஒன்றுக்கூடும் உறுப்பினர்கள்
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் திடீரென உயிரிழப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |