Home இலங்கை கல்வி பல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பல்கலை அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த பெறுபேறுகள் இன்று (20) மாலை வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, வெட்டுப்புள்ளிகளை www.ugc.as.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும்.

வெட்டுப்புள்ளிகள்

இதேவேளை, பல்கலைக்கழக அனுமதிக்கு 87,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 43,000க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்பட உள்ளதாகவும் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

மேலும், ஓகஸ்ட் மாத இறுதிக்குள் வெட்டுப்புள்ளிகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/new-university-cut-off-scores-announced-1726838744

NO COMMENTS

Exit mobile version