Home இலங்கை சமூகம் நாட்டில் புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான அறிவிப்பு

நாட்டில் புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான அறிவிப்பு

0

இந்த வருடம் முதல் மூன்று மாதங்களில் புதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, மோட்டார் சைக்கிள்கள் உட்பட 20 வாகன வகைகளின் கீழ் 37,463 வாகனங்கள், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

33,992 மோட்டார் சைக்கிள்கள், 530 கார்கள் (ஜனவரி (111 , பெப்ரவரி 92, மார்ச் 327) 195 முச்சக்கர வண்டிகள் உட்பட 20 வகைகளின் கீழ் இவ்வாறு வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டில், 74,410 வாகனங்கள் புதிய பதிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் இந்த வாகனங்கள் 1644 கார்கள், 65,289 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 83 முச்சக்கர வண்டிகள் உட்பட 20 வாகன வகைகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

NO COMMENTS

Exit mobile version