Home உலகம் பிரித்தானிய குடியேற்றக் கொள்கை மாற்றம்! ஏற்படப்போகும் பெரும் நெருக்கடி

பிரித்தானிய குடியேற்றக் கொள்கை மாற்றம்! ஏற்படப்போகும் பெரும் நெருக்கடி

0

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை (NHS) மிகப்பெரிய பணியாளர் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. 

அரசின் புதிய குடியேற்றக் கொள்கை மாற்றங்கள் காரணமாக, வெளிநாட்டு செவிலியர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்ற அபாயம் அதிகரித்துள்ளது.

Royal College of Nursing (RCN) நடத்திய ஆய்வில், 50,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செவிலியர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேற திட்டமிட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மாற்றங்களின் தாக்கம்

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, நிகர புலம்பெயர்வை குறைக்கும் நோக்கில், வெளிநாட்டு பணியாளர்களுக்கு Indefinite Leave to Remain (ILR) பெற வேண்டிய காலத்தை 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்க முன்வந்துள்ளது. 

Image Credit: BBC

இதனுடன், அதிக கல்வித்தகுதி மற்றும் மேம்பட்ட ஆங்கிலத் திறனை கட்டாயமாக்கும் புதிய நிபந்தனைகளும் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.

இந்த மாற்றங்கள், NHS-ல் தற்போது பணிபுரியும் இரண்டு இலட்சம் வெளிநாட்டு செவிலியர்களில் நான்கில் ஒரு பங்கை நேரடியாக பாதிக்கும். 

ஆய்வில் கலந்து கொண்ட 5,000-க்கும் மேற்பட்ட செவிலியர்களில் 60 சதவீதம் பேர், இந்நிலையில் பிரித்தானியாவில் தொடர முடியாது என்று தெரிவித்துள்ளனர். இதனால் சுமார் 46,000 பணியாளர்கள் நிரந்தரமாக வெளியேறக்கூடும் அபாயம் உள்ளது.

புதிய குடியேற்றத் திட்டம் 

RCN பொதுச் செயலாளர் நிக்கோலா ரேஞ்சர், “இந்தத் திட்டம் நோயாளிகளின் பாதுகாப்பையே ஆபத்துக்குள்ளாக்கும். சுகாதார அமைப்பின் நிலைத்தன்மையை கவனிக்கும் எந்த அரசும் ILR தகுதி காலத்தை நீட்டிக்க முன் வரக்கூடாது” என்று எச்சரித்துள்ளார்.

Image Credit: www.britannicaoverseas.com

தற்போது ILR விண்ணப்பக் கட்டணம் 3,039 பவுண்டு. இது செயலாக்கச் செலவான 523 பவுண்டை விட பல மடங்கு அதிகம். 2003இல் இதே கட்டணம் வெறும் 155 பவுண்டாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய குடியேற்றத் திட்டம் வெளிநாட்டு செவிலியர்களிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் குடும்ப வாழ்க்கை, நிதிநிலை, தொழில் வளர்ச்சி ஆகியவை பாதிக்கப்படும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. 

இந்த சூழ்நிலை தொடர்ந்தால், NHS-இல் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் அரசின் முயற்சிகளும் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version