Home இலங்கை சமூகம் காலி முகத்திடலில் இன்று நடைமுறைக்கு வரும் தடை

காலி முகத்திடலில் இன்று நடைமுறைக்கு வரும் தடை

0

புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்றைய தினம் காலிமுகத்திடல் பிரதேசத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு பொலிசார் தடை விதித்துள்ளனர்.

2025ஆம் ஆண்டை வரவேற்பதற்காக பெருந்தொகையான மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(31) காலி முகத்திடல் வளாகத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படாது

அதனை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

கொழும்பு நகரில் எதிர்பார்க்கப்படும் கடுமையான வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில், புறக்கோட்டை, கொம்பனித் தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கறுவாத் தோட்டம் போன்ற பொலிஸ் பிரிவுகளில் இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் இன்றைய தினம் காலி முகத்திடலில் வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படாது என்றும், வாகனங்கள் நிறுத்துவதற்காக வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version