Home இலங்கை சமூகம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் நியூசிலாந்து

இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் நியூசிலாந்து

0

சர்வதேச மனிதாபிமான கூட்டாளி மூலம் அவசரகால மனிதாபிமான நிவாரணத்தை ஆதரிப்பதற்காக இலங்கைக்கு 1 மில்லியன் நியூசிலாந்து டொலர்களை பங்களிப்பதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியூசிலாந்து அரசாங்கமும் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு 

கொழும்பில் உள்ள நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் தனது இரங்கலையும் எண்ணங்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் 300இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பல நாடுகளும் இலங்கையின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளித்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version