வேளாண்மை, வனவியல் மற்றும் சுற்றலா போன்ற துறைகளில் பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க, இரண்டு புதிய வேலை விசாக்களை டிசம்பர் மாதத்தில் விண்ணப்பிக்க திறக்க இருப்பதாக நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, இதற்காக உலகளாவிய பணியாளர் பருவகால விசாவை(Global Workforce Seasonal Visa) அறிமுகப்படுத்தவுள்ளதாக குடிவரவு அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட் தெரிவித்துள்ளார்.
குறித்த விசாவானது, மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
முக்கிய நோக்கம்
இந்த திட்டம் கிராமப்புற ஒப்பந்தப் பணியாளர்கள், வைன் உற்பத்தி பணியாளர்கள், ஸ்கி லிப்ட் இயக்குநர்கள் போன்ற சிறப்பு திறமையும், உயர் நிபுணத்துவமும் கொண்டவர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும் குடிவரவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த விசா பெற்றவர்கள், மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் காலத்தில் விரும்பிய எத்தனை முறை வேண்டுமானாலும் நியூசிலாந்து வரவும் செல்லவும் முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு…..நியூசிலாந்து விசா விபரம்
