நியூசிலாந்துக்கு (
New Zealand) எதிரான 2 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி20 தொடரில் இலங்கை (Sri Lanka) அணியின் தலைவராக சரித் அசலங்க (Charith Asalanka) நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியின் இலங்கை சுற்றுப்பயணம் நவம்பர் 9-ம் திகதி தொடங்குகிறது.
இலங்கை அணி
ரி20 போட்டிகள் நவம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகள் 2024 நவம்பர் 13, 17 மற்றும் 19 ஆகிய திகதிகளிலும் நடைபெறும்.
ரி20 மற்றும் முதல் ஒருநாள் போட்டி தம்புள்ளையில் நடக்கிறது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் பல்லேகலவில் நடைபெறும்.
ஒருநாள் அணி
இதற்கமைய, இலங்கை ஒருநாள் அணியில் சரித் அசலங்க (கே), அவிஷ்க பெர்னாண்டோ, பதும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷ்க, துனித் வெல்லலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜெஃப்ரி தீக்ஷன, ஜெஃப்ரி தீக்ஷனன், மதுஷங்க மற்றும் மொஹமட் ஷிராஸ்.
Sri Lanka has revealed its 17-member squad for the upcoming white-ball series against New Zealand, kicking off on November 9.🇱🇰🇳🇿#ODIs #T20Is #SLvsNZ pic.twitter.com/7aPMyhHYf0
— CricTracker (@Cricketracker) November 6, 2024
ரி20 அணி
இலங்கை ரி20 அணியில் சரித் அசலங்கா (கே) பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ச, வனிந்து ஹசரங்க, மஹேஷ் தீக்ஷன, துனித் வெல்லலகே, ஜெப்ரி வான்டர்சே, சமிது விக்ரமசிங்க, நுவன் துஷாரா, மதிஷா பத்திரனா, பினூரா பெர்னாண்டோ மற்றும் அசித பெர்னாண்டோ. ஆகியோரின் பெயர்களை தெரிவுக்குழு வெளியிட்டுள்ளது.